Newskadai.com
தமிழ்நாடு

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 7 பேர் பலி…! உறவினர்கள் கதறல்

oxygen cylinder
Share this:

திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவி அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில் கடுமையான கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. எனினும், வைரஸ் பாதிப்பும் அதன் உயிரிழப்பும் அதிகரித்தபடி உள்ளது. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்த நிலையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், கொரோனா தடுப்பு மருந்து ஆகியவைகளின் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன. ஒருசில இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றி வந்த 7 நோயாளிகள் உயிரிழந்ததாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே அண்டை மாநிலங்களில் இருந்து கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் ரயில் மூலமாக தமிழகத்தை அடைந்துள்ளன.


Share this:

Related posts

5 மாதத்திற்கு பிறகு பேருந்து பயணம்… பலத்த பாதுகாப்புடன் தொடங்கிய  பேருந்து சேவை…!!

THAVAMANI NATARAJAN

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓபிஎஸ்..!

MANIMARAN M

7 பேர் கொண்ட குழு நியமணம் : புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய தமிழக அரசு அதிரடி…

MANIMARAN M

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

தூய்மையான நகரங்கள் பட்டியல் வெளியீடு…. அநியாயத்திற்கு பின் தங்கிய சென்னை… எத்தனையாவது இடம் தெரியுமா?

MANIMARAN M

மாதந்தோறும் மின்கட்டண அளவீடு… முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு… அமைச்சர் தங்கமணி…!!

MANIMARAN M