Newskadai.com
தமிழ்நாடு

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

Corona virus
Share this:

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தீயாய் விட வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் அஞ்சி நடுக்கும் சூழ்நிலை உருவானது. தினந்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனால் சென்னையில் பிழைப்பு தேடி வசித்து வந்த பலரும் தங்களது சொந்த ஊர்களை நோக்கி பைக்கில் பயணம் செய்யும் காட்சிகள் எல்லாம் வெளியானது.

Corona virus
 

ஆனால் வீடு தோறும் கொரோனா பரிசோதனை, கடுமையாக்கப்பட்ட கொரோனா கட்டுப்பாடுகள் என சுகாதாரத்துறை மேற்கொண்ட கடும் நடவடிக்கையால் சென்னையில் தொற்று குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களாகவே சென்னையில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.

Corona virus

இந்நிலையில் இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, சென்னையில் 6 வது நாளாக கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகியுள்ளது சென்னைவாசிகளை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சென்னையில் இன்று 993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 059 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் சென்னையில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையை விட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தொற்று அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M

இதுவரை இல்லாத அளவிற்கு மழை தீவிரமா வெளுத்து வாங்கப்போகுது…!!

THAVAMANI NATARAJAN

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

பேருந்தில் கூடுதலாக 1 ரூபாய் வசூல்… தனியார் பஸ் ஓனருக்கு ரூ.20,000 அபராதம்…!!

MANIMARAN M

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பிற்கு நாளை முதல் தடை?… மத்திய அரசு அதிரடி…!

NEWSKADAI