தமிழகத்தில் சில மாதங்களாகவே ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் எங்கு பார்த்தாலும் ஈரத்தண்மையுடனே கானப்படுகிறது. இதனால் பல்வேறான உயிரினங்கள் காட்டுப்பகுதியில் உருவாகிறது. அருகில் இருக்கும் வீடுகள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உலா வருகிறது. இதுபோன்று சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியில் 800 ஏக்கர் பரப்பில் தனியார் தேனிரும்பு உருக்காலை அமைந்துள்ளது. இங்கு நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாம்புகள் ஏராளமாக உலாவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
இதனால் மக்கள் கொடுத்த புகாரையடுத்து அந்த நிர்வாகத்தினர் காஞ்சிபுரம் மாவட்டம் பேரூரில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினரைக் கொண்டு கடந்த 20 ம் தேதி முதுல் இன்று வரை பாம்பை உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பிடிபட்ட பாம்புகளில் நல்ல பாம்பு 4, கண்ணாடி விரியன் 10, மற்றும் பச்சைபாம்பு, தண்ணீர் பாம்பு, உல்ப் சினேக், ரசுல் குக்ரி ஆகிய 67 பாம்புகள் உயிருடன் பிடிக்கப்பட்டு, அவற்றை மேட்டூர் வனத்துறை அலுவலர் பிரகாஷ் முன்னிலையில் கொளத்தூர் அருகே உள்ள வட பர்கூர் காப்புக் காட்டில் விடப்பட்டது. ஏழு நாட்களாக பாம்பு வேட்டையில் ஈடுபட்டு பாம்புகளை பிடிக்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதனை படிக்க: http://சுற்றுலா தளங்களில் பசியால் வாடிய குரங்குகள்… பசியை மறக்கடித்த இசை..!!!