Newskadai.com
அரசியல்

தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் கேவலமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… குவியும் கண்டனங்கள்…!

Share this:

சென்னை மீனம்பாக்கம் நங்கநல்லூரில் உள்ள தனியார் குடியிருப்பில் கணவனை இழந்த 60 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். அதே குடியிருப்பு பகுதியின் கீழ் தளத்தில் வசித்து வரும் புற்றுநோய் மருத்துவர் சுப்பையா என்பவர், பாஜகவின் மாணவர் அணியில் அகில இந்திய பொறுப்பில் உள்ளார். இவருக்கும் மூதாட்டிக்கும் கார் பார்க்கிங் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து மூதாட்டிக்கு பல பிரச்சனைகளை கொடுத்து வந்துள்ளார்.

Doctor
 

தொடர் தொல்லைகளின் உச்சகட்டமாக மூதாட்டின் வீட்டு வாசல் முன்பு நின்று சிறுநீர் கழிக்கும் கேவலமான செயலை செய்துள்ளார் சுப்பையா. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் மூதாட்டியின் உறவினர் பாலாஜி என்பவர் புகார் அளித்துள்ளார். அவருடைய புகாரை ஏற்றுக்கொள்ளாத காவல்துறை பாலாஜியை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

தனியாக வசித்து வரும் மூதாட்டியிடம் தரக்குறைவாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகிக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆதம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this:

Related posts

“தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பில்லை”… அமைச்சர் செங்கோட்டையன் உறுதி….!!

AMARA

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி…!!

NEWSKADAI

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா?…. மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை…!!

NEWSKADAI

திமுகவின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறியே தீருவர்… மு.க.ஸ்டாலினை தெறிக்கவிட்ட மு.க.அழகிரி…

MANIMARAN M

இன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…

MANIMARAN M