Newskadai.com
விளையாட்டு

“ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்ரா”… 54 வயதில் அதிரடியாக கம்பேக் கொடுக்க போகும் மைக் டைசன்…!

Share this:

“யார் அடிச்சால் பொறி கலங்கி பூமி அதிரது உடம்பில் தெரியுதோ” அவர் பெயர் தான் மைக் டைசன். குத்துச்சண்டை உலகின் ஹெவி வெயிட் ஜாம்பவான் மைக் டைசன் தனது 54 வயதில் மீண்டும் களம் இறங்க உள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, குத்துச் சண்டை ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். இருப்பு மனிதர் என ரசிகர்களால் பாராட்டப்பட்ட மைக் டைசன் 1985 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தனது அதிரடியான பஞ்ச்களால் சர்வதேச குத்துச்சண்டை களத்தை அசத்தியவர்.

தனது இருபது வயதிலேயே ஹெவி வெயிட் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்று ஒட்டுமொத்த உலகையும் தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். உலகளவில் தன்னை யாரும் எதிர்கொள்ளமுடியாத அளவிற்கு 1987 முதல் 1990-ஆம் ஆண்டுவரை வெற்றிவாகை சூட்டினார்.

டெர்வர் பெர்பிக்குடனில் 1986ம் ஆண்டு நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 2-வது சுற்றில் எதிரியை வீழ்த்தி மைக் டைசன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.உலக குத்துச்சண்டை அமைப்பான டவிள்யுபிஏ, சர்வதேச குத்துச் சண்டை கூட்டமைப்பான ஐபிஏ மற்றும் உலக குத்துச்சண்டை கவுன்சில் டபிள்யுபிசி ஆகியவற்றின் சாம்பியன் பட்டங்களை ஒனறாக வென்று குவித்த வீரர் என்ற பெருமை மைக் டைசனை சாரும்.

புகழின் உச்சகட்டைத்தை அடைந்த மைக் டைசன் இவ்வுலகின் மிரட்டலான சிங்கம் என்பதில் ஆச்சரியம் இல்லை அதேசமயம் அவரை பற்றிய சர்ச்சைகளும் காட்டு தீ போல் கொளுந்துவிட்டெரிந்தது. பாலியல் வழக்கு, போதை மருந்து சர்ச்சை, களத்தில் எதிராளியின் கதை கடித்தது என டைசனின் அட்ராசிட்டி பட்டியல்கள் நீண்டுகொண்டே செல்கிறது.

மைக் டைசன் வெற்றிகரமாக 9 முறை தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டார். இதுவரை 58 தொழில் முறை குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்ற டைசன், 50க்கும் அதிகமாக வெற்றிகளை ருசித்தவர். 2005ம் ஆண்டு தோல்வியுடன் ஓய்வை அறிவித்த டைசன், தற்போது தனது 54வது வயதில் மீண்டும் களம் இறங்க உள்ளார்.

செப்டம் 12ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டிக்னிடி ஹெல்த் ஸ்போர்ட்ஸ் பார்க் மையத்தில் நடக்க உள்ள 8 சுற்றுக்கள் கொண்ட குத்துச்சண்டை போட்டியில் மைக் டைசன் மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைக் காண டைசனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.


Share this:

Related posts

விளையாட்டுத்துறையில் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… பிரபல கால் பந்தாட்ட வீரருக்கு தொற்று உறுதி…!

NEWSKADAI

“தல தல தான்” புகழ்ந்து தள்ளிய சைமன்….

MANIMARAN M

IPL கொண்டாட்டம்… தோனி தலைமையில் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச் சென்றது CSK அணி..

MANIMARAN M

குஷியான செய்தி: லாக்டவுனை தவிடு பொடியாக்கிய ஐபிஎல்… செப்டம்பரில் போட்டிகள் தொடக்கம்!!

NEWSKADAI

சீனப் பகையால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்பட்ட பல கோடி இழப்பு

MANIMARAN M

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு அடுத்த அதிர்ச்சி… IPL-லிருந்து விலகிய முக்கிய வீரர்…!!

MANIMARAN M