Newskadai.com
சினிமா

ரஜினியும் அரிசி மூட்டையும்… சின்னத்திரையில் நடக்கும் மோதல்..!!

Rajini
Share this:

கொரோனா ஊரடங்கு கொடுங்காலத்தில் சின்னத்திரை கலைஞர்கள் பலரும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கு பலரும் நிவாரணம் அளித்து வந்தார்கள். இருப்பினும் கொடுக்கப்பட்ட நிவாரணங்கள் சரியாக பாதிக்கப்பட்டவர்களை சேர்வதில்லை. முறையாக அவர்களை சேர்ந்திருந்தால் மூன்று கலைஞர்கள் பரிதாபமாக இறந்திருக்க மாட்டார்கள் என சின்னத்திரை நடிகைகள் கொந்தளிக்கின்றனர். ரவிவர்மா சின்னத்திரை நடிகர் சங்க தலைவராக உள்ளார்.

Ravi varma

இந்த நிலையில் அவர் மீது சின்னத்திரை நடிகைகள் புகார் தெரிவித்துள்ளனர். அதில் ரவிவர்மாவின் தலைமை சரியில்லை, தலைவர் என்ற ஸ்தானத்தில் இருந்து அவர் எந்த வேலையையும் சரியாக செய்வதில்லை, அவர் செய்யும் தவறுகளை தட்டிக்கேட்டால் மறைமுகமாக எங்களை மிரட்டுகிறார். அவருக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே சலுகைகளை செய்கிறார்.

சங்கத்திற்கு ஏதாவது ஒரு நிதி வருகிறது என்றால் அதை அணைவருக்கும் பகிர்ந்து தருவதில்லை. இதை கேட்டால் நான் தலைவர் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை என அதட்டுகிறார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் சாப்பாடு கிடைக்காமல் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினி 50 மூட்டை அரிசியை வழங்கினார்.

ஆனால் அந்த 50 மூட்டையை காணோம், அதில இருந்த 850 கிலோ அரிசி என்னதான் ஆச்சு என தெரியவில்லை, சங்கத்து பணத்தை நிறைய கையாடல் செய்கிறார் ரவிவர்மா. இதனால் கலைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். என்று வலியுறுத்தினார்கள். இதன் பிறகு சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த ரவிவர்மாவை சங்கத்தின் தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


Share this:

Related posts

இயக்குநர் அட்லி வீட்டில் திடீர் மரணம்… துடிதுடிக்கும் சோகத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு…!!

AMARA

கண்ணில் கனல் தெறிக்கும் கமல்… வெளியானது “பிக்பாஸ் சீசன் 4” ப்ரோமோ வீடியோ…!!

AMARA

“பிஎம் நரேந்திர மோடி” – அக்டோபர் 15-ல் செகண்ட் ரிலீஸ்

MANIMARAN M

சூப்பர் ஸ்டாருக்கு சவால் விடும் கேஜிஎஃப் ‘ராக்கி பாய்’… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

THAVAMANI NATARAJAN

பூங்காவில் ஆபாச உடையில் பயிற்சி… பிரபல நடிகையை தாக்க முயன்ற கும்பல்… பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“என் இனிய தமிழக அரசே…” பாரதிராஜாவின் உருக்கமான கடிதம்

MANIMARAN M