Newskadai.com
தமிழ்நாடு

டன் கணக்கில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல்… தமிழகம் முழுவதும் இங்கிருந்துதான் டெலிவரியாம்..!!

Share this:

மதுரையில் குட்கா புகையிலை பொருள் அதிக அளவில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக  புகார் எழுந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி திலகர் திடல் காவல் துறையினர் ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த லாரிகளில் சோதனையிட்டனர். லாரிகளில் பண்டல் பண்டலாக 5 டன் அளிவிலான குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Gutka

பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பீடானது ரூ.25 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து கைது செய்யப்பட்ட லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியடையும் தகவல்கள் வெளியாயின. குட்காவை இரண்டு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்வேன். அவர்கள் தென் தமிழக மாவட்டம் முழுவதிலும் டெலிவரி செய்வார்கள் என கூறினார். இது தொடர்ந்து இரண்டு பார்சல் சர்வீஸ் நிறுவனங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Gutka

குட்கா கடத்தலில் சம்பந்தப்பட்ட மதுரை எஸ்.எஸ் காலணியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும மேலஅனுப்பானடியை சேர்ந்த துரைப்பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசாருக்கு மீன்டும் அதிர்ச்சி தகவல் காத்திருந்தது. குட்கா கடத்தலின் முக்கிய புள்ளியாக தீபக் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் தீபக் என்பவரை கைது செய்யும் பொருட்டு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.


Share this:

Related posts

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு ஒரே நாளில் மூவர் பலி…

NEWSKADAI

10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணை தேர்வு ஹால்டிக்கெட் தயார்… நாளை மறுதினம் பதிவிறக்கம் செய்யலாம்…!!

THAVAMANI NATARAJAN

சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி… ஆட்சியர் சீதாலட்சுமிக்கு உறுதியானது கொரோனா தொற்று….!!

NEWSKADAI

காதல் திருமணம்: மருமகனை ஆள் வைத்து அடித்துக்கொன்ற மாமனார் கைது…!!

THAVAMANI NATARAJAN

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M