Newskadai.com
தமிழ்நாடு

சென்னையை அடுத்து கடலூரில் நடந்தேறிய பயங்கரம்…. குட்கா கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல்…!!

Share this:

கொரோனா தொற்று பரவலால் உலக நாடுகளுக்கு பொருளாதாரம் பாதித்தாலும், உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், சட்ட விரோதமாக செயல்பட்டு கோடிஸ்வரர்கள் ஆகுபவர்கள் பலே கில்லாடிகள்தான். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் அருகே உள்ள கே.என். பேட்டையில் உள்ள ஒரு வீட்டில்  குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் சட்ட விரோதாமாக விற்பனை செய்து வந்துள்ளனர்.
  
இது குறித்து கடலூர் டிஎஸ்பி சாந்தி அவர்களுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சாந்தி தலைமையிலான போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கே.என். பேட்டை பகுதியில் உள்ள அந்த வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் பண்டல் பண்டலாக மூட்டையில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இவையனைத்தும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களாகும்.
மாவட்ட எஸ்.பி.ஸ்ரீஅபிநவ் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படை போலீசார் அமைத்து குட்கா வேறு எங்கெல்லாம் மறைத்து வைத்திருக்கிறார்கள் என கண்டுபிடிக்க கடலூர் மாவட்டத்தை முழுவதுவமாக சோதனை நடத்த உத்தரவிட்டார். மேலும் உணவுப் பாதுகாப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் விலையை மதிப்பீடு செய்தனர். அதில் 8 டன் குட்கா  பொருட்கள் இருந்துள்ளது.  அந்த வீட்டை வாடகைக்கு பயன்படுத்திய பாரதி என்பவர் குட்கா விற்பனையில்  ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Drag
இது குறித்து பாரதியிடம் விசாரித்ததில் குட்கா வினியோகஸ்தராக இருந்த திருப்பாதிரிப்புலியூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரவணன்,  ராம்குமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இவர்களோடு குட்கா பதுக்கலில் தொடர்புடைய இருந்த கே.என்பேட்டை பிரசாந்த், போடிச்செட்டித்தெரு தேவநாதன், நெல்லிக் குப்பம் கணபதி ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் 5 கோடிக்கும் மேல் மதிப்புக் கொண்ட சொத்து ஆவணங்களை பாரதி வீட்டில் கைப்பற்றியதை தொடர்ந்து வருமானவரிதுறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Share this:

Related posts

சல்யூட்: ஜனாதிபதி விருது பெரும் தமிழக காவல்துறை

MANIMARAN M

விரைவில் நிரம்பப்போகும் மேட்டுர் அணை… விவசாயிகள் மகிழ்ச்சி

THAVAMANI NATARAJAN

மருத்துவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய செவிலியர்… ஜிப்மர் மருத்துவமனையில் வெடித்தது போராட்டம்…!!

MANIMARAN M

கொரோனா மரணங்களை நேர்மையாக வெளியிட வேண்டும்… தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்!

AMARA

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

மேட்டூரில் ரயில்வே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பெண் பலி… திமுக எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் ஆறுதல்…!!

AMARA