Newskadai.com
தமிழ்நாடு

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

Share this:

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே இருக்கும் மானாங்கோரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முகுந்தன். இவரது 9 வயது மகன் பிரகதீஷ், 4ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான். விவசாயக் குடும்பத்தை சார்ந்த முகுந்தன் மற்றும் அவரது மனைவி வரலட்சுமி விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வந்தவர்கள். கடந்த சில வருடங்களாக சரியான மழையின்மை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து விவசாயத்திற்கு வரும் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தஞ்சை மற்றும் டெல்டா பகுதிகளில் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த பாதிப்பில் முகுந்தனும் தப்பவில்லை. இதனால் விவசாயத்தை நம்பி இருந்த முகுந்தன் வருமானமின்றி பெரிதும் தவித்து வந்தார்.

பின்னர் வேறு வழியின்றி விவசாயத்தை கைவிட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றார். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவருக்கு கொரோனாவும் அவரது வருமானத்தை புரட்டிப் போட்டது. அங்கும் சிரமத்துடன் இருந்தார் முகுந்தன். இந்நிலையில் கடந்த மாதங்களில் குறுவை சாகுபடிக்காக தமிழக அரசு தண்ணீர் திறந்து விட்டதைத் தொடர்ந்து முகுந்தனின் மனைவி வரலட்சுமி விவசாயம் செய்யத் தொடங்கினார். கொரோனா அச்சம் மற்றும் ஊரடங்கு காரணமாக விவசாய உதவிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. சிறுவயது முதல் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்ட முகுந்தனின் மகன் பிரகதீஷ் தன் தாயுடன் தானும் விவசாயம் செய்ய வருவதாகக் கூறியுள்ளான்.

இதனைத் தொடர்ந்து வரலட்சுமிக்கு உதவியாக அவரது மகன் பிரகதீஷும் விவசாயத்தில் இறங்கினான். விவசாயத்தில் ஆர்வம் கொண்ட பிரகதீஷ் களையெடுத்தல், வரப்பு வெட்டுதல் போன்ற பணிகளை செய்து வருகிறான். இது குறித்து பிரகதீஷ் கூறுகையில், விவசாயம் செய்வது தனக்கு மிகவும் பிடிக்கும், விவசாயக் கல்லூரியில் படித்து சிறந்த விவசாயியாக ஆவதே தனது லட்சியம் என்று கூறுகிறான். வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ், ஆன்லைன் கேம்ஸ் என்று பெரும்பாலான சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் வயதில், விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பது போல், விவசாயத்தின் மீதுள்ள சிறுவனுடைய ஆர்வம் அவனை ஒரு சிறந்த விவசாயியாக உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Share this:

Related posts

நாகை மக்களுக்கு ரூ.1000 கோடியை அள்ளிக்கொடுத்த முதல்வர்… அசத்தலான திட்டங்கள்…

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

இந்த மாவட்டங்களில் கொரோனா உச்சத்தை தொடும் – தலைமைச் செயலாளர் அபாய எச்சரிக்கை…!!

MANIMARAN M

“வீட்டுக்கு இரு மரம் வளர்ப்போம்”… ஜலகையில் இயற்கையை காக்க புதிய முயற்சி…!!

THAVAMANI NATARAJAN

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

“சதுரங்க வேட்டை” பட பாணியில் நடந்த மோசடி… ரூ.60 கோடி அம்பேல்…!!

MANIMARAN M