Newskadai.com
இந்தியா

மத்திய கல்வி அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலம்… 40% JEE தேர்வு மாணவர்களின் நிலை என்ன..?

Share this:

கொரோனா பொது முடக்கத்தால் கடந்த ஆறு மாதங்களாக நாட்டின் பொருளாதாரம், போக்குவரத்து, மாணவர்களின் கல்வி அனைத்தும் முடங்கிப்போய் கிடக்கும் நிலையில் மத்திய அரசு நீட் மற்றும் ஜேஇஇ நுழைவு தேர்வுகளை நடத்த திட்டமிட்டது. இதற்கு கல்வியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். NEETமற்றும் JEE தேர்வுகளை ஒத்திவைக்க பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இவர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காத மத்திய அரசு NEET மற்றும் JEE தேர்வுகளை குறித்த காலத்தில் நடத்தியே தீர வேண்டும் என்பதில் உறுதி காண்பித்தது.

மத்திய கல்வி அமைச்சர் பொக்ரியால் செய்தியாளர்களிடம் “NEET மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்ததற்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து உள்ளது. 90% மாணவர்களும் பெற்றோர்களும் அரசின் முடிவிற்கு ஆதரவாக உள்ளனர். இத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டால் மாணவர்களின் ஓராண்டு கல்வி பாழாகும்.” என்று தெரிவித்திருந்தார். மத்திய அரசு திட்டமிட்ட படியே JEE தேர்வுகள் செப்டம்பர் 1-ம்தேதி தொடங்கியது. செப்டம்பர் 6 வரை பல கட்டங்களாக நாடு முழுவதும் 660 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களை விட மிகக் குறைவான மாணவர்களே தேர்வுகளை எழுதி உள்ளனர்.

பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி இவ்விஷயத்தில் அரசுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பியுள்ளார். தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் கோரியிருந்தார். மத்திய கல்வி அமைச்சர் போக்ரியால் நாடு முழுவதும் JEE தேர்வு எழுதிய மாணவர்கள் விவரத்தை வெளியிட்டுள்ளார். அதில் மொத்தம் ஒன்பது லட்சத்து 53 ஆயிரத்து 473 மாணவர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். முதல் மூன்று நாட்களில் 4 லட்சத்து 58 ஆயிரத்து 521 மாணவர்கள் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. மத்திய கல்வி அமைச்சரின் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பித்த மாணவர்களில் கிட்டத்தட்ட 40% மாணவர்கள் JEE தேர்வுகளை எழுத முடியாத சூழலுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது ஆதாரபூர்வமாக தெரியவருகிறது.

கொரோனா பொது முடக்கத்தால் நாடு முழுவதும் பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து வசதி இல்லாததும் இதற்கு முக்கிய காரணம். நாடும், மாணவர்களும் முழுமையாக இதுபோன்ற தேர்வுகளுக்கு தயாராகாத நிலையில் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்ற தங்களது கோரிக்கைக்கு மத்திய அமைச்சரின் இந்த அறிக்கையை ஆதாரப்பூர்வ சான்றாக உள்ளது. எனவே நீட் மற்றும் JEE தேர்வுகளை மத்திய அரசு ஒத்தி வைக்க வேண்டும் என கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்க்கட்சியினர் மீண்டும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


Share this:

Related posts

25 ஆயிரம் கோடியை ஏப்பம் விட துடிக்கும் அம்பானி பிரதர்ஸ்… சட்டையைப் பிடிக்கும் உச்சநீதிமன்றம்…

MANIMARAN M

நாட்டையே உலுக்கிய தங்க கடத்தல் வழக்கு: முக்கிய புள்ளிகள் பற்றி வெளியான அதிர்ச்சி தகவல்…!

NEWSKADAI

ஜே.இ.இ மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு : 24 மாணவர்கள 100% மதிப்பெண்கள்…

MANIMARAN M

துணை முதல்வர் பதவிவேண்டி கடவுளுக்கு கடிதம் எழுதிய அமைச்சர்…!!

THAVAMANI NATARAJAN

ரூ.1 அபராதம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…!!

MANIMARAN M

ரயில்வேயில் தனியார் : 50 சதவீதம் நிரந்தர காலி பணியிடங்களை திரும்ப ஒப்படைக்க ரயில்வே வாரியம் உத்தரவு.

NEWSKADAI