Newskadai.com
தமிழ்நாடு

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

accident
Share this:

கடலூர் மாவட்டத்தை வேப்பூர் அருகே உள்ள பெரியநசலூர் என்னுமிடத்தில் மீன்களை ஏற்றி வந்த லாரி தன் கட்டுபாட்டை இழந்து எதிரில் வந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது ஒன்றின் பின் ஒன்றாக மோதி விபத்து ஏற்பட்டது.

பரங்கிபேட்டையிலிருந்து சேலத்தை நோக்கி மீன் லோடு ஏற்றி வந்த லாரி பெரயநசலூர் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது தன் கட்டுபாட்டை இழந்தது. இதனால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் தறிகெட்டு ஓடிய அந்த  மினி லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் குளஞ்சிநாதர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் சிக்கினர். இந்த கோர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர், 4     பேர் படுகாயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து ஏற்பட்ட இடத்தில் சென்ற பொதுமக்களில் சிலர் விபத்தில் இறந்தும் உயிருக்கு போராடியும் வந்தவர்களையும் சற்றும் பொருட்படுத்தாமல் மீன் லாரியிருந்த மீன்களை எடுத்து செல்வதில் தான் ஆர்வம் காட்டினர். கொரோனா காலத்தில் கொஞ்ச நஞ்சம் இருந்த மனிதாபிமானமும் காற்றில் பறந்ததை எண்ணும் போது, இவர்களை போன்ற இரக்கம் இல்லா மனிதனிடம் எங்கே மனிதத்தை தேடுவது என்ற கேள்வியே எழுகிறது.

 


Share this:

Related posts

பாதிக்குமேல் அதிகரித்த கொரோனா பாதிப்பு… பீதியில் ஜலகை மக்கள்…

MANIMARAN M

சென்னையில் 6வது நாளாக அடக்கி வாசிக்கும் கொரோனா…. மகிழ்ச்சியில் மக்கள்…!!

AMARA

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

MANIMARAN M

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

THAVAMANI NATARAJAN