Newskadai.com
தமிழ்நாடு

3 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்… குடிக்காரனின் குடும்ப சண்டையில் பொசுங்கிய பிஞ்சு உடல்…!

Share this:

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டத்தில் உள்ள தலைவாசல் அடுத்துள்ள ஆறகளுர் பகுதியில் லாரி டிரைவர் மருதமுத்து, அவர் மனைவி தெய்வானை மற்றும் இவர்களுக்கு 17 வயதில் மோனிசா என்ற மகளும், மகனும் இப்பகுதில் வசித்து வருகின்றனர். மருதமுத்து குடி பழக்கம் உள்ளவர் என்பதால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருந்து வந்துள்ளது.

Near Salem poured petrol on the 3 year old child killed 

இந்நிலையில் கடந்த புதன் கிழமை மாலை மருத முத்துவின் மனைவி தன் மகள் மோனிசாவுன் அருகில் உள்ள கிராம ஊராட்சி வார்டு உறுப்பினராக இருக்கும் திவ்யா என்பவரின் வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து தன் கையில் ஒரு பெட்ரோல் கேனுடன் வந்துள்ளார். அங்கு அவர்களுக்குள் ஏற்பட்ட சிறிய தகராறில் கையில் வைத்திருந்த பெட்ரோலை தன் மனைவி மற்றும் மகள் மீது ஊற்றியுள்ளார்.  அப்பொழுது அருகில் திவ்யா மற்றும் அவரின் குழந்தை தனுஸ்ரீயுடன் விறகு அடுப்பு எரித்துக் கொண்டிந்துள்ளார்.

மருதமுத்து தனது மனைவி மற்றும் மகள் மீது ஊற்றிய பெட்ரோல் விறகு அடுப்பிற்கு அருகில் இருந்த திவ்யா மற்றும் அவருடைய 3 வயது குழந்தை தனுஸ்ரீ மீதும் தெறித்துள்ளது. அந்த சமயத்தில் அடுப்பில் இருந்து வெளியான தீப்பொறியால் 4 பேர் மீதும் தீப்பற்றிய ஆரம்பித்தது. இவர்களுடைய அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் நான்கு பேரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 3 வயது சிறுமி தனுஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது மருதமுத்துவை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்… விதிமுறைகள் குறித்த அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு…!!

MANIMARAN M

கொதித்தெழுந்த மன்னார்குடி விவசாயிகள்… வேளாண் சட்ட நகல் எரிப்பு போராட்டம்…!!

MANIMARAN M

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

இன்று முதல் லாக்டவுன்… ஊரடங்கை மதிக்கிறார்களா ஜலகைவாசிகள்??

AMARA

மதுரையில இதெல்லாம் சாதாரணம்ப்பு… இது மூணாவதப்பு…

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI