Newskadai.com
தமிழ்நாடு

மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

Share this:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய பெருவிழா செப்டம்பர் 8 ஆம் தேதியன்று நிறைவடைந்தது. ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தினாலும், மாவட்ட நிர்வாகத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணத்தினாலும், பேராலயத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதிக்கபடவில்லை. ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு வழிபாட்டு தலங்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்தைத் தொடர்ந்து பொது மக்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக அளவில் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ராமதாஸ் தனது மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு புறப்பட்டு வந்துள்ளார். அங்கு வந்த அவர்கள் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். விடுதியில் இருந்தபொழுது தங்களது 3 வயது குழந்தை மனுஸ்ரீ நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளது. இதில் குழந்தை மனுஸ்ரீக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே ராமதாஸ் குழந்தையை தூக்கிக் கொண்டு நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக விரைந்து சென்றார். ஆனால் நாகை அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து வேளாங்கண்ணி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Share this:

Related posts

முதல்வர் தொகுதியில் தலைவிரித்தாடும் கொரோனா… கிடா விருந்தில் பங்கேற்ற 150 பேருக்கு தொற்று??

THAVAMANI NATARAJAN

“சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறங்க”… நாகையில் விவசாயிகள் போராட்டம்…!!

MANIMARAN M

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

#BREAKING மக்களே வெளிய வராதீங்க… இந்த 6 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை… தமிழக அரசு எச்சரிக்கை…!

NEWSKADAI

நெல்லையில் அரங்கேறிய அவலம்… குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி எடுத்த விபரீத முடிவு…!

THAVAMANI NATARAJAN

இந்த மாவட்டங்களில் மட்டும் அடங்காத கொரோனா… தமிழகம் முழுக்க இன்றைய நிலை..!!

NEWSKADAI