Newskadai.com
தமிழ்நாடு

கள்ளக்காதலால் 3 வயது குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்… ஈவு இரக்கமற்ற தாயின் கொடூர செயல்…!!

Share this:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை சேர்ந்த ராமதாசு என்பவரும் எழிலரசி என்பவரும் 3 வயது குழந்தையுடன் வேளாங்கண்ணிக்கு வந்து தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் 3 வயது குழந்தை மனுஸ்ரீ நிலைதடுமாறி மாடியில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கூறி நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தூக்கி சென்றுள்ளனர். நாகை அரசு மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து ராமதாசும் எழிலரசியும் குழந்தையின் உடலை அரசு மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி காவல்துறையினர் வழக்கு பதிந்து தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். ராமதாசும், எழிலரசியும் வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் நின்றுக் கொண்டிருக்கும் தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். விசாரணையில் அந்த இருவரும் கள்ளக்காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ராமதாசு திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த அறுவடை இயந்திர ஓட்டுனராக இருப்பவர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளியூரைச் சேர்ந்த மகேந்திரன் என்பவருடைய மனைவி எழிலரசி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழிலரசியின் கணவர் மகேந்திரன் உயிரிழந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் மகனும் 3 வயதில் மகளும் உள்ளனர். எழிலரசிக்கு தொலைபேசி மூலம் அறிமுகமான ராமாதாசு கடந்த ஒரு வருடமாக பழகி வந்துள்ளனர். இருவரும் நேரில் சந்தித்துக் கொள்வதற்காக ராமதாசும், குழந்தையுடன் எழிலரசியும் வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்களின் உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த குழந்தை மனுஸ்ரீயை ராமாதாசு சரமாரியாக தாக்கியதால் குழந்தை மயங்கி விழுந்துள்ளது.

மேலும் படிக்க : http://மூன்று வயது குழந்தை மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – வேளாங்கண்ணியில் பரிதாபம்…

உடனே இருவரும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால அங்கு குழந்தை இறந்துவிட்ட தகவல் அறிந்து அதிர்ச்சியில் இருவரும் தலைமறைவாகி விட்டனர். இதன் பின்னர் காவல்துறையினர் தேடிவந்த நிலையில் இருவரும் வேளாங்கண்ணிக்குச் சென்று அறையை காலி செய்து விட்டு தப்பிக்க முயற்சிக்கையில் காவல்துறையிடம் பிடிப்பட்டுள்ளார்கள் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.


Share this:

Related posts

மாவட்டந்தோறும் அதிரடி… நாகை மக்களுக்காக முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்…!!

MANIMARAN M

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

கடலில் குளிக்க தடை : வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்…

MANIMARAN M

கறி விருந்து: ஜலகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி?

NEWSKADAI

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M