Newskadai.com
தமிழ்நாடு

ஆலங்குடியில் 24, 25,26 தேதிகளில் முழு ஊரடங்கு… மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு…!!

Lock down
Share this:

தமிழகத்தில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு தற்போது பெரு நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களும், கிராமங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத்துறை பணியாளர்கள் களத்தில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது கொரோனா தடுப்பிற்கு பிற நாடுகளில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை அதிகாரப்பூர்வமாக சந்தைப்படுத்தவில்லை. அதனால் தொற்றின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடித்தலும் மட்டுமே தற்போது பின்பற்ற வேண்டிய நடைமுறையாக உள்ளது.

  

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பின்பற்று வருகின்றன. கட்டாய முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருப்பினும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Corona virus

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 1370 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 112 ஆக உள்ளது. இந்நிலையில் ஆலங்குடியில் கொரோனா தொற்றைக்கட்டுப்படுத்தும் விதமாக வரும் 24, 25, 26 தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி தேவையின்றி வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கொரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு குட்நியூஸ்… தமிழக அரசின் அசத்தல் அனுமதி…!

NEWSKADAI

முஜே ஹிந்தி மாலும் நஹி ..! ஃப்ரூப் கரோ… எம்.பி.கனிமொழி ஆவேசம்..!

MANIMARAN M

மன்னார்குடி ஃபேமிலியே தேவலாம் போல… தலை சுற்ற வைக்கும் பிஎஸ்பிபி பள்ளி பேக்ரவுண்ட்…!

NEWSKADAI

பக்தர்களுக்கு நல்ல செய்தி: இன்று கோயில்கள் திறப்பு… வழிகாட்டு நெறிமுறைகளை தெரிஞ்சிக்கிட்டு போங்க…!!

THAVAMANI NATARAJAN

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

தமிழகத்தில் இ-பாஸ் கட்டாயம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!!

NEWSKADAI