ஓலா மற்றும் ஊபர் டாக்சி ஓட்டுனர்களின் கோரிக்கைக்கு டெல்லி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்காததால் இன்று முதல் ஓலா மற்றும் ஊபர் டாக்ஸி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். வங்கிக் கடனை செலுத்த கூடுதல் கால அவகாசம், வாடகை கட்டணத்தை உயர்த்துதல், குறைந்தபட்ச சம்பளம் போன்ற கோரிக்கைகளை அரசிடம் வலியுறுத்தி வந்த நிலையில் வங்கிகளுக்கான காலநீட்டிப்பு நேற்றுடன் முடிவடைந்துவிட்டது.
மாதத் தவணை தொகையை செலுத்துமாறு வங்கிகள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டன. இதனால் ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் சுமார் 2 லட்சம் பேர் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து சேவைகள் துவக்கப்படாத நிலையில் தனியார் டாக்ஸி ஓட்டுனர்களின் வேலை நிறுத்தத்தால் டெல்லி வாழ் மக்களுக்கு மேலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.