Newskadai.com
இந்தியா

பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலம்… தினம் தினம் அரங்கேறும் பாலியல் வன்கொடுமைகள்..!!

Share this:

சில தினங்களுக்கு முன் உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் பசுக்களுக்கு புல் வெட்டுவதற்காக தன் தாயுடன் வயலுக்குச் சென்றிருந்த 19 வயது பெண் கடத்தப்பட்டார். அவளை பாலியல் வன்புணர்வு செய்த மனித மிருகங்கள் இரக்கமே இல்லாமல் அந்தப்பெண்ணின் நாக்கை அறுத்து உள்ளனர். அப்பெண்ணின் முதுகுத் தண்டுவடத்தை உடைத்து குற்றுயிரும் கொலை உயிருமாக வீதியில் வீசி சென்றனர் மனித உருவில் அலையும் கொடூர மிருகங்கள். மகளை காணாது தேடிய தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனது மகளை கண்டுபிடித்தார்.

முதுகெலும்பு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்த தனது மகளை ரிக்க்ஷாவில் மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறார். நீதி கேட்டு மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வருகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்திதொடர்பாளர் சுதிந்திரா பதோரியா இது தொடர்பாக கூறியதாவது,  “உத்தர பிரதேசத்தில் தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த வகையான பின்னணியில் இருந்து வரும் மக்களை அடக்குவதற்கும் , சுரண்டுவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்வதற்கும் தபாங்ஸ் (வலிமையானவர்கள்) தங்களது பலத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்த பாலியல் பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நாக்கு வெட்டப்பட்டு, அவளது முதுகெலும்பு இரக்கமின்றி உடைக்கப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. உத்தர பிரதேச அரசாங்கமும், காவல் துறையும் என்ன செய்கிறார்கள், இதுதான் அவர்கள் மக்களை காக்கும் விதமா? என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி இது குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளார். தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்களை தடுக்க தீவிர நடவடிக்க எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் உத்தர பிரதேசத்தில் தலித்துகளின் பாதுகாப்பிற்காக அரசு எதுவும் செய்யவில்லை” என்று அவர் தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டு வருவது, அந்த மாநிலத்தை பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக உணரவைக்கிறது.


Share this:

Related posts

“வெட்கங்கெட்ட ஆட்சி”… முற்றும் சிவசேனா – பாஜக மோதல்…!!

NEWSKADAI

29 ஆண்டுகளுக்குப் பிறகு அயோத்தியில் கால் வைத்தார் பிரதமர் மோடி… மகிழ்ச்சியில் இந்துக்கள்…!!

NEWSKADAI

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

MANIMARAN M

பிரசவத்திற்கு ஆட்டோ மட்டுமல்ல மெட்ரோ ரயிலும் வரும்… ஒரே ஒரு கர்ப்பிணிக்காக நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

தவறுதலாக வெடித்த துப்பாக்கி… மார்பில் குண்டு பாய்ந்து மரணமடைந்த டிஜிபி…!!

THAVAMANI NATARAJAN