Newskadai.com
இந்தியா

புதிதாக 15 மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி… மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு…!!

Share this:

ராஜஸ்தான் மாநிலத்தில் 15 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ரகு சர்மா தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், அஷோக் கெலாட் தலைமையிலான மாநில அரசின் முயற்சியால் ராஜஸ்தான் ஒரு முன்மாதிரி மாநிலமாக மாறி வருகிறது. முதலமைச்சரின் வலுவான தலைமையில் சுகாதாரம், சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சுகாதார மனிதவளத் துறை ஆகியவற்றில் அரசு சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்கு சிறந்த சுகாதார வசதிகளை வழங்குவதில் அரசாங்கம் எந்தவொரு சமரசமுமின்றி அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி இருக்க வேண்டும் என்பதே மாநில அரசின் திட்டம். இதனால், 15 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளது, தற்போது மூன்று மாவட்டங்களில் 8 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதில், அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் இல்லாத நிலையில். இந்த மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தற்போது கிடைத்துள்ள ஒப்புதல் மூலம் 15 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரிகள் விரைவில் அமைக்கப்படும் என்று டாக்டர் ரகு சர்மா தெரிவித்தார்.


Share this:

Related posts

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு கொரோனா தொற்று… மருத்துவமனைக்கு செல்லும் முன் கூறிய அறிவுரை…!!

AMARA

கருப்பு பூஞ்சையை தொடர்ந்து மிரட்டும் மஞ்சள் பூஞ்சை

MANIMARAN M

கொரோனா பீதி: கைவிடப்பட்ட முதியவர் சடலம்… கண்டுகொள்ளாத சுகாதாரத்துறை… இறுதியில் அரங்கேறிய அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

“மனதுக்கு பிடித்த இடத்தை நோக்கி பறந்து கொண்டிருக்கிறோம்”… விமான விபத்தில் பலியான பயணியின் உருக்கமான பதிவு…!!

MANIMARAN M

இறுதிக்கட்ட பரிசோதனையில் கொரோனா தடுப்பு மருந்து… இந்தியாவிற்கு கிடைத்த சூப்பர் வாய்ப்பு…!!

NEWSKADAI