Newskadai.com
இந்தியா

பற்றி எரியும் பெங்களூரு… துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழப்பு… பரபரப்பு காட்சிகள்…!!

Share this:

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இஸ்லாம் மதம் குறித்து அவதூறான பதிவை பதிந்துள்ளார். இது குறித்து நவீனுக்கு எதிராக இஸ்லாமியர்கள் புகார் கொடுத்தும் போலீசார் நவீணுக்கு எதிராக வழக்கு பதிய மறுத்துள்ளனர். கோபமடைந்த மக்கள் நேற்றிரவு காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் புலிகேசி நகர் வீட்டை முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர். கூட்டத்தில் ஒருசிலர் கலவரத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர்.

துப்பாக்கிச்சூட்டில் இரண்டு போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். எம்எல்ஏவுக்கு எதிரான எதிர்ப்புப் போராட்டம் மத மோதலாக மாறி விடக் கூடாது என்று எண்ணிய இஸ்லாமியர்கள் அங்கிருந்த இந்து கோயில் ஒன்றை மனித சங்கிலி அரண் அமைத்து பாதுகாத்தனர். பெங்களூர் நகரின் பல இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Share this:

Related posts

சல்யூட்: உலகின் சிறந்த சிந்தனையாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சுகாதாரத்துறை அமைச்சர்..!!

MANIMARAN M

விடைபெற்றார் பிரணாப் முகர்ஜி… முழு ராணு மரியாதையுடன் உடல் தகனம்..!!

AMARA

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

“இவர்களால் தான் நாடு முன்னேறும்”… நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி பெருமிதம்…!!

MANIMARAN M

கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வில் அனுமதி இல்லை – மத்திய அரசு…

MANIMARAN M

லாக்டவுனிலும் வாடகை தந்தே ஆக வேண்டும்… ராஜஸ்தான் நீதிமன்றத்தின் அதிரடி…!..!

NEWSKADAI