உலக பெருந்தொற்று COVID-19 கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளிக் கல்லூரிகள் திறக்க தடை விதித்து மத்திய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. நடைபெற வேண்டிய அரசு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவித்தது தமிழக அரசு. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களின் பள்ளி வருகையின் அடிப்படையிலும், காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க உத்தரவிட்டது. இதனடிபடையில் பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டது தமிழக பள்ளிக்கல்வித் துறை.
மேலும் படிக்க:http://ஸ்கூல் இருக்கு…. ஆனா இல்ல… மாணவர்களை குஷி படுத்திய அறிவிப்பு
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி அருகே குருங்குடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர் நிஷாந்த் தான் தேர்ச்சிப் பெற்றதையும் தனக்கு கிடைத்த மதிப்பெண்களையும் போஸ்டரில் குறும்புத்தனமாக வடிவமைத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி மகிழ்ச்சியடைந்துள்ளார். அந்த போஸ்டரில் “பத்தாவதில் என்னை பாஸ் போட்ட வரலாற்று சாதனை படைத்த ஐயா எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றி” என்றும், “என்னை பார்த்து ஏளனமாகச் சிரித்த எனது ஆசிரியர்களுக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்கிறேன்” என்றும் மிகவும் குறும்புத்தனமாக வடிவமைத்து, தனது புகைப்படத்தையும் தனக்கு வழங்கபட்ட மதிப்பெண்களையும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மை தன்மைக் குறித்து உறுதியான தகவல் இல்லை.