Newskadai.com
தமிழ்நாடு

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

Share this:

கடந்த வாரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை என்றும், சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தாமதமாக வழங்கப்படும் உணவும் சரியாக வேகாமல் அரைகுறையாக வழங்கப்படுவதாகவும், இதனால் உடல் நலக்கோளாறுகள் ஏற்படுவதாகவும் நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நோயாளிகள் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கொட்டுகாரன்பட்டியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை முகாமில் தங்கியிருந்து நேற்று குணமானார். நேற்று காலை பத்து மணியளவில் அவரை வீடு திரும்ப ஆம்புலன்ஸிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரவு ஏழு மணிக்குதான் அவர் வீடு திரும்புவதற்கு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்கப்பட்டார். 63 வயது மூதாட்டியை கொட்டுகாரன்பட்டிக்கு 13 கிலோமீட்டர் முன்பாகவே ஊத்தங்கரையில் இறக்கிவிட ஆம்புலன்ஸ் டிரைவர் முயன்றிருக்கிறார்.

உடனே மூதாட்டி தனது மகனுக்கு தொலைபேசியில் தகவலளித்துள்ளார். மகனும் கடந்த 25ம் தேதி கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீட்டில் கோரண்டைன்னில் இருக்கிறார். ஆனால் தாய் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும், கொரோனாவிலிருந்து மீண்டவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் அவரை வீட்டில் கொண்டு வந்து விடும் படி ஆம்புலன்ஸ் டிரைவரிடம் எடுத்துரைத்துள்ளார். அச்சமயத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் தகாத வார்த்தைகளில் இவர்களை பேசியுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இவர்களுடன் அனுப்பி வைக்கப்பட்ட காரபட்டு மற்றும் கெங்கபரான்பட்டியைச் சேர்ந்தவர்களையும் ஆம்புலன்ஸ் டிரைவர் பாதி வழியிலேயே இறக்கிவிட்டு வந்துள்ளார். மூதாட்டியின் மகன் தன் அம்மாவை கொட்டுகாரன்பட்டியில் கொண்டு வந்து விடவில்லை என்றால் கலெக்டரிடம் புகார் செய்வேன் என்று கூறிய பிறகே ஆம்புலன்ஸ் டிரைவர் மூதாட்டியை கொட்டுகாரன்பட்டிக்கு அழைத்து வந்து இறக்கி விட்டுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து அந்த மூதாட்டியே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்… இதோ… 

மேலும் படிக்க : http://சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்… கிருஷ்ணகிரி ஆட்சியருக்கு வைத்த கோரிக்கை வீடியோ…!!


Share this:

Related posts

பாலியல் வழக்கில் கைதான மகன்… ஒருவேளை சோற்றுக்கூட வழியில்லாமல் தள்ளாடும் பிரபல நடிகர்…!!

THAVAMANI NATARAJAN

நடிகையிடம் சில்மிஷம் – முன்னாள் அமைச்சர் மீது 5 பிரிவில் வழக்குப்பதிவு

AFRIN

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

ஏழை மாணவியின் ஐ.ஏ.எஸ்.கனவு… வீடு தேடி போய் உதவிய மாவட்ட ஆட்சியர்…!!

THAVAMANI NATARAJAN

தமிழக அரசின் ஓப்பன் அறிவிப்பு – ரூ.69 கோடி வரை குவிந்த கொரோனா நிவாரண நிதி

MANIMARAN M

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தீ விபத்து… 3 பேருந்துகள் முற்றிலும் எரிந்து நாசம்…!!

MANIMARAN M