Newskadai.com
இந்தியா

கொரோனாவை அடுத்து பேய் மழையிடம் சிக்கிய மும்பை… கரைபுரளும் வெள்ளத்தால் கவலையில் மக்கள்…!!

Share this:

மும்பையில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் கனமழையின் தொடர்சியாக கொலாபா மற்றும் சாண்டாக்ரூஸ் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. கொரோனா பெருந்தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது மும்பை மாநகரம்.

கொலாபா பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் 107 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளிக் காற்றுடன் கூடிய மழையினால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டு கூரைகளும், பெரும் விளம்பர பதாகைகளும், கார்களும் பலத்த சேதமடைந்தன. இச்சூறாவளிக் காற்று அப்பகுதியையே புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 22.9 செ.மீட்டர் என்றளவில் இதுவரை  காணாத புதிய பதிவாக மழை பெய்துள்ளது.  மேலும் மும்பை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மஹாராஸ்ட்ரா மாநில அரசு இந்த பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் அமைச்சர் ஆதித்யா தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் ” மக்கள் அனைவரையும் வீட்டிற்குள் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். மும்பை அதிவேக காற்று மற்றும் மிக அதிக மழையால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக ஊடகவியலாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, மஹாராஸ்ட்ரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேயிடம் மும்பையில் மழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அங்கு தற்போது நிலவும் சூழல் குறித்தும் பேசியுள்ளதாகவும், மத்திய அரசு மாநிலத்தற்கு உறுதுணையாக இருக்கும் என்றும் தனது ட்விட்ர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Share this:

Related posts

பள்ளிகள் திறப்பு எப்போது?… மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

சரக்கில் சானிடைசர் கலந்தடித்த 10 ‘குடி’மகன்கள் பலி…. ஆந்திராவில் அரங்கேறிய பரிதாபம்…!!

NEWSKADAI

அதிர்ச்சி… கொரோனா தொற்றுக்கு பெண் அமைச்சர் உயிரிழப்பு…!!

AMARA

பிரபல நடிகர் மீது வழக்கு பதிவு… படப்பிடிப்பில் ரசிகர்கள் குவிந்ததால் பரபரப்பு.!!

THAVAMANI NATARAJAN

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

கேரள நிலச்சரிவு: சேற்றில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு…!!

THAVAMANI NATARAJAN