Newskadai.com
தமிழ்நாடு

அதிரடி சோதனை : வேளாங்கண்ணியில் சிக்கியது தடைசெய்யப்பட்ட 100 கிலோ பொருட்கள்…!!

Share this:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள கடைகளில் சுமார் 100 கிலோ தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. உலக பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தலம் புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

வேளாங்கண்ணியில் உள்ள கடைகளில் சுற்றுலா பயணிகளுக்கான நினைவு பொருள்கள், வழிபாடு பொருட்கள் என விற்கப்படுகின்றன. இந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப் படுத்தப்படுவதாகவும், விற்கப்படுவதாகவும் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரனுக்கு தகவல் வந்துள்ளது.

இதனையடுத்து நாகை மாவட்ட ஆட்சியர் ப்ரவீன் நாயர் உத்தரவின்பேரில், வேளாங்கண்ணியில் உள்ள கடைகளில் செயல் அலுவலர் தலைமையிலான குழு சோதனை நடத்தினர். அந்த சோதனையில் பல கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ப்ளாஸ்டிக் பைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சோதனையில் சிக்கிய சுமார் 100 கிலோ ப்ளாஸ்டிக் பைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அதிரடி சோதனை நடவடிக்கை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Share this:

Related posts

ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்… மனதை குதூகலமாக்கும் ‘கூல்’ வீடியோ…!

THAVAMANI NATARAJAN

தூக்கில் தொங்குவது போல் செல்ஃபி… வினையாய் முடிந்த இளைஞரின் விபரீத விளையாட்டு…!!

MANIMARAN M

ஊராட்சி மன்ற தலைவி புருஷனுக்கும் – கவுன்சிலர் கணவருக்கும் மோதல்… போனில் கழுவி ஊற்றிக்கொண்ட திமுக – அதிமுக பிரமுகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

கேன்சரால் மனைவி மரணம்… துக்கம் தாங்காமல் தூக்கில் தொங்கி கணவர் தற்கொலை…!

MANIMARAN M

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

THAVAMANI NATARAJAN