Newskadai.com
உலகம்

’கொடூர கொரோனா’ உலக மக்கள் தொகையில் எவ்வளவு பேரை தாக்கி இருக்கு தெரியுமா?!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனா பெரும்பாலான நாடுகளில் பரவி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் உலக சுகாதார மையத்தின் கோவிட்-19-க்கான 34 உறுப்பினர்களை கொண்ட சிறப்பு நிர்வாகக் குழுவின் டாக்டர் மைக்கேல் ரியான் கூறுகையில், “கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் புள்ளி விவரங்கள் நகர்ப்புறத்திலிருந்து கிராமப்புறம் மற்றும் வெவ்வேறு குழுக்களுக்கு இடையில் வேறுபடுகின்றன. ஆனால் இறுதியில் இதன் பொருள் “உலகின் பெரும்பாலானவர்கள் ஆபத்தில் உள்ளனர்” என்பதையே எடுத்துக் காட்டுகிறது என்று கூறினார். மேலும் இந்த தொற்று நோயின் பரிணாமம் தொடரும், ஆனால் நோய் பரவுவதை தடுப்பதற்கும் உயிர்களை காப்பதற்கும் சில வழிகள் உள்ளன.

தற்போது உலகளவில் தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், ஐரோப்பா மற்றும் கிழக்கு மத்தியதரை கடல் பகுதிகளில் கொரோனவால் இறப்புகள் அதிகரித்து வருவதாகவும், ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு பசிபிக் பகுதிகளில் “அதிக பாசிட்டிவ்” உள்ள சூழல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை வைத்து பார்க்கும் பொழுது, “உலகளாவிய மக்கள் தொகையில் சுமார் 10 சதவிகிதத்தினர் இந்த கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று எங்கள் தற்போதைய மதிப்பீடுகள் கூறுகின்றன என்று டாக்டர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

தமிழக மருத்துவ மாணவர்களை காவு வாங்கிய வோல்கா நதி…

MANIMARAN M

உயிரைப் பறித்த “நூடுல்ஸ் சூப்”… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி… பகீர் பின்னணி…!

NEWSKADAI

வடகொரிய அதிபரை வச்சி செஞ்ச கொரோனா… முதல் நபருக்கு உறுதியானது தொற்று…!

NEWSKADAI

மக்களே உஷார்: கொரோனாவின் ஆட்டம் இனி கொடூரமாக இருக்கும்… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!

NEWSKADAI

குட் நியூஸ்: வந்தாச்சு 2வது கொரோனா தடுப்பூசி… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

MANIMARAN M

மக்களால் நான்… மக்களுக்காக நான்… பதவி விலகிய பிரதமர்…

MANIMARAN M