Newskadai.com
தமிழ்நாடு

ஜலகையை வச்சு செய்யும் கொரோனா: தொற்றால் அடுத்தடுத்து 10 பேர் பலி!?..

Share this:

முதல்வரின் சொந்த ஊரான சேலம் மாவட்டம், எடப்பாடிக்கு அருகேயுள்ள ஜலகண்டாபுரத்தில் கொரோனாவின் தீவிரம் வச்சு செஞ்சுகொண்டிருக்கிறது. ஜலகையில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதனால் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வில் இறங்க… 152 பேருக்கு தொற்று இருக்கலாம் எனக்கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக நடத்தப்பட்ட பரிசோதனையில் முதல் நாளில் 46 பேருக்கும், அடுத்த நாள் 20 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும் படிக்க : http://ஜலகையில் செஞ்சூரி அடித்த கொரோனா… தீயாய் பரவும் தொற்றுக்கு மேலும் ஒருவர் பலி?

இதையடுத்து ஜலகண்டாபுரம் பேரூராட்சிக்கு கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 27 வரை ஒருவாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வீடு, வீடாக சுகாதாரப் பணியாளர்கள் சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மற்றும் மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடைசியாக ஜலகண்டாபுரத்தில் மொத்தம் 100 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஜலகை மற்றும் சுற்றுவட்டாரத்தில் 9 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாகவும், அதில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருந்திருக்காலாம் என்ற சந்தேகமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வுகளை பிறப்பித்துள்ளதால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பியது போன்ற மாயையில் மெல்ல வெளியே வரத்தொடங்கியுள்ளனர்.

Jalakandapuram

இன்று தீடீரென ஜலகண்டாபுரத்தைச் சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், அவருக்கும் கொரோனா தொற்று இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரையில் மொத்தம் 10 பேர் கொரோனா தொற்று மற்றும் கொரோனா சந்தேகத்தின் பேரில் இறந்திருப்பதால் மீண்டும் ஜலகை மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்..


Share this:

Related posts

பட்டையைக் கிளப்ப போகும் வீரலட்சுமி… 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான முதல் பெண் ஓட்டுநர்…!!

MANIMARAN M

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

தமிழ்நாட்டில் பரிசோதிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து..

NEWSKADAI

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

MANIMARAN M