Newskadai.com
தமிழ்நாடு

பதஞ்சலி நிறுவனத்திற்கு 10 லட்சம் அபராதம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி…

Share this:

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தை பதிவு செய்து ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதற்கு கொரோனில் என்று பெயரிட்டு விளம்பரங்கள் செய்து வருகின்றன, தங்கள் நிறுவனம் பதிவு செய்துள்ள வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக கூறி, கொரோனில் பெயரை பயன்படுத்த பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளைக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்தது.

இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரில் ஏதாவது பொருட்கள் வணிகச் சின்ன பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என தெரிந்துக் கொள்ளாமல், அதே பெயரில் மருந்து தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

 

 

மேலும் படிக்க:http://சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி நிறுவனம், கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, எந்தவித அங்கீகாரத்தையும் தேடாமல் சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு… எவற்றுக்கெல்லாம் தளர்வுகள் அறிவிப்பு….!

NEWSKADAI

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வசூல்… மாயமான திமுக துணை செயலாளருக்கு வலைவீச்சு…!

THAVAMANI NATARAJAN

மது போதையில் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் வீசிய பியர் பாட்டில்…படுகாயம் அடைந்து ஆசிரியை…

THAVAMANI NATARAJAN

கர்நாடக மாநிலத்தில் முழு கடையடைப்பு… தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்பட்டது..

THAVAMANI NATARAJAN

பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்கு ரூ.7.70 லட்சமா?… அதிர்ச்சியான மக்கள்… வீடியோ விட்டு சரண்டரான எம்.எல்.ஏ….!

MANIMARAN M