கடந்த மார்ச் மாதம் 2 முதல் 24 தேதி நடைபெற்ற +2 தேர்வை 7.79 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்விற்கான தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியான நிலையில் அதில் 7.28 இலட்சம் பேர் தேர்ச்சி அடைந்தனர், 51 ஆயிரம் பேர் தோல்வி அடைந்தனர். மார்ச் மாதம் தேர்வு நேரத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்ட சில பகுதிகளில் வேதியல், கணக்கு பதிவியில், புவியியல் தேர்வுகள் நடைபெறாமல் போயின. அப்படி அந்த தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்காக ஜூலை 27ல் மறுதேர்வு நடைபெற்றது.
தேர்வு நடைபெறாமல் போன இடங்களில் 289 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 846 மாணவர்கள் தேர்வு எழுதியினர். இது குறித்து தமிழக கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முன் தினம் நடந்த மறு தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ள நிலையில், மேலும் பிளஸ்-2 மறு தேர்வு முடிவு நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பிளஸ்-1 தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 8.32 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ்-1 பொதுத்தேர்விற்கான முடிவுகள் நாளை மறுநாள் காலை 9.30 மணிக்கு இணைய தளத்தில் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்றும், மாணவர்கள் https://tnresults.nic.in/, https://dge.tn.nic.in/, https://dge1.tn.nic.in, https://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.